கோவை புத்தகத் திருவிழா கொடீசியா அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது. அதனையொட்டி கோவையில் புத்தக வாசிப்பினையும் பண்பாட்டுச் செயல்பாடுகளையும் அதிகரிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் "அறிவுக்கேணி" எனும் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆலமரத்தடியில் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் பூரணி, ஜனா, கிருத்திகா, யுவராஜ், அஸ்வின் ஆகியோர் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி கொடுத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாரத் சீயோன் பவுண்டேசன் மற்றும் கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 குழந்தைகள் கலந்துகொண்டனர்.